அன்றிரவு காதலை குடித்துமுடிக்க
சிறிது நேரமாகி இருந்தது.
முதுகுசொறிதலில் குவிந்திருந்த என்
முழுகவனத்தை திசைமாற்றி உன்
இதழ்இடுக்குகளில் என்னை சேர்வித்திருந்தது காதல்!
காதல் ஈரமாக இருப்பதில் ஆச்சரியமில்லை..
குடுவைகளின் வர்ணம் மாறியபோதும்
காதலின் வாசம் பற்றி நான் சிந்தித்திருக்கவில்லை!
வீரியம் குடுவைக்கு குடுவை வேறுபட்டிருப்பதையும் கவனிக்கவில்லை!
காதலிக்கையில் வீரியம்,வர்ணம் விளங்காதவையே!
பெரும்பாலும் பின்னிரவுகளில் வந்தமர்கிறாய் நீ..
நான் அழகாய் உணரும் அத்தருணங்களை
சேமித்துவைப்பதாய் உறுதியளிக்கும் நிலைகண்ணாடியை
மட்டும் எனக்கு பரிசளி!
முத்தங்களை இரவுக்கு இரண்டென தீர்மானித்திருக்க,
உபையோகிக்காததை கொண்டு செல்லாதே-
பச்சை வர்ணக்குடுவைக்குள் பத்திரபடுத்தித்தா.,
நாளையிரவு காதலின் வீரியமிகுதி விளங்கப்பட்டிருக்கும்!
நீ சிரிப்பதையும் சிலஇரவுகளாய் மாற்றிவிட்டிருக்கிறாய்..
அழுந்த சிரிக்கும் தருணங்களில்
உன் உதட்டு சுருக்கங்களாய் விரிந்துதொலைகிறது
என் மூளை சுருக்கங்கள்!
நான் காதலை மறுதலிக்கும் இரவுகளில்
நீ வருவதில்லை போலும்.
பிறிதொரு இரவில் இரண்டாம் குடுவையின் வாய்திறக்கையில்
பட்டென தலையில் அடித்து பாடம் நடத்துகிறாய்!!!
இரவுகளில் மட்டும் காதலிப்பதாய் உத்தேசித்திருந்தேன்! பகல்பொழுதில் உன் புறக்கணித்தலை குளிர்விக்க,
வண்ணக்குடுவைகளில் காதலை சேமிக்கிறேன் சிலதினங்களாய்..
பகலிலும் நீ வருவாயா?
காதலிக்கலாம்!
Tuesday, July 13, 2010
நிலையாமை
நீரின் மேல் விழும் வானம்
ஓன்றின்பால் நிலையாமையின் நீளம் அறிவாயெனில்.,
விழும் ஒரு துளியும்.,
வாழ்வும்.,
பட்டென சிதறிவிழும் ஈசலின் இறகும்
நிலையாமையே அன்றின் நிலையென ஏதுமிலா!!!
குரங்கின் முதுகு நிமிர பாட்டனென்றாய்..
பெண்ணை தாசிஎன பயின்று பின் தாரமென்றாய்..
பூமியை தட்டையென மொழிந்து உருண்டையென்றாய்..
விளங்கிய மதிகொண்டு விளக்கினாய்
விளங்காதெனில் என் செய்வாய்?
வீடு ஒன்றிருக்க விலாசத்தின் முதல்வரி
உன் பாட்டன்.,
பின் உன் மகனின் பாட்டன்.,
பின் உன் பெயராய் நிலைதப்பி பாயும்பார்-
என்றந்த முதல்வரி உன்மகனாய் மாறியதோ
அன்றறிவாய் நிலையாமை விளங்காததென்று!
அன்றின் அதுவன்றோ நிலை!
ஓன்றின்பால் நிலையாமையின் நீளம் அறிவாயெனில்.,
விழும் ஒரு துளியும்.,
வாழ்வும்.,
பட்டென சிதறிவிழும் ஈசலின் இறகும்
நிலையாமையே அன்றின் நிலையென ஏதுமிலா!!!
குரங்கின் முதுகு நிமிர பாட்டனென்றாய்..
பெண்ணை தாசிஎன பயின்று பின் தாரமென்றாய்..
பூமியை தட்டையென மொழிந்து உருண்டையென்றாய்..
விளங்கிய மதிகொண்டு விளக்கினாய்
விளங்காதெனில் என் செய்வாய்?
வீடு ஒன்றிருக்க விலாசத்தின் முதல்வரி
உன் பாட்டன்.,
பின் உன் மகனின் பாட்டன்.,
பின் உன் பெயராய் நிலைதப்பி பாயும்பார்-
என்றந்த முதல்வரி உன்மகனாய் மாறியதோ
அன்றறிவாய் நிலையாமை விளங்காததென்று!
அன்றின் அதுவன்றோ நிலை!
Subscribe to:
Posts (Atom)